Thursday, 23 January 2014

பார்த்த நொடிகள்

ஒர் நிமிடம் உன்னை 
பார்த்தேன்.
ஓர் ஆயிரம் இரவுகள் 
உறக்கம் இன்றி தவிக்கின்றேன்..


என் வாழ்க்கை அழகானதும் 
உன்னாலே!


புயலென திரிந்த என்னை
பூக்களை ரசிக்கவும் கற்று தந்தது
நீ தானே!



மணிக்கனக்காக கடற்கரை
சாலையில் காதிதிருந்ததும்
உனக்காகவே!
மறு நாள் உன் திருமாண அழைப்பிதல்
எனக்காக காத்திருப்பது தெரியாமலே!


மறக்க முடியாத 
நொடிகள்!
முதல் முதல் நான் உன்னை பார்த்த
நொடிகள்! 
மறுக்க முடியாத 
நொடிகள்!
இன்று நீ என்னை விட்டுச்செல்லும்
நொடிகள்!




Wednesday, 22 January 2014

இனிது இனிது இளமை இனிது...

இன்று வரை நான் தவறிய இளமையின் நொடிகளை எண்ணி உள் நெஞ்சத்தினால் குமுறாத நாட்கள் எண்ணிக்கைய்ல் சொற்பமே..
துள்ளியாடிய பள்ளிப்பருவ நாட்கள்.
மணிக்கான தலைப்புக்களே இல்லாத நட்பின் அரட்டைகள்.
எல்லாம் திரும்பவும் எண்ணும் போது வெறும் ஒரு மணி நேர கனவு போன்று உள்ளது...




"தவறிவிட்ட நொடிகளை எண்ணி
ஏங்குவதை விட
தான் அனுபவித்த நொடிகளை எண்ணி
இன்பம் கொள்வதே
சிறந்தது."
என என் மதி சொன்னாலும்
அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்
மனதிற்கு இல்லை எனவே கூறலாம்.

இன்பங்கள் நூறு இருந்தாலும்
உறவுகள் ஆயிறம் இருந்தாலும்
காலம் கடந்த  கோடி நொடிகளுக்கு
ஈடாகுமா?

"வளர்வது தெரியாது
வளர்ந்தது தெரியும்"

நகம் போன்றது
 நட்பு.