Wednesday, 22 January 2014

இனிது இனிது இளமை இனிது...

இன்று வரை நான் தவறிய இளமையின் நொடிகளை எண்ணி உள் நெஞ்சத்தினால் குமுறாத நாட்கள் எண்ணிக்கைய்ல் சொற்பமே..
துள்ளியாடிய பள்ளிப்பருவ நாட்கள்.
மணிக்கான தலைப்புக்களே இல்லாத நட்பின் அரட்டைகள்.
எல்லாம் திரும்பவும் எண்ணும் போது வெறும் ஒரு மணி நேர கனவு போன்று உள்ளது...




"தவறிவிட்ட நொடிகளை எண்ணி
ஏங்குவதை விட
தான் அனுபவித்த நொடிகளை எண்ணி
இன்பம் கொள்வதே
சிறந்தது."
என என் மதி சொன்னாலும்
அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் என்
மனதிற்கு இல்லை எனவே கூறலாம்.

இன்பங்கள் நூறு இருந்தாலும்
உறவுகள் ஆயிறம் இருந்தாலும்
காலம் கடந்த  கோடி நொடிகளுக்கு
ஈடாகுமா?

"வளர்வது தெரியாது
வளர்ந்தது தெரியும்"

நகம் போன்றது
 நட்பு.



No comments:

Post a Comment