பேசிடத்தான் நினைக்கின்றேன்
உன்னை என்னும் போது
ஆனால் ஏனோ மௌனிக்கின்றேன்
உன்னை காணும் போது.
அழித்து விடுகின்றேன்
உன் நினைவை
என் மனதிலிருந்து,
என் தொடர்பெண்ணை
உன் தொலை பேசியில்
அழித்து விடுவதானால்
மழைத்துளியும் என் காதலை
கண்டு கொண்டதடா
ஒவ்வொரு முறையும்
உன் நினைவுடன்
கண்ணீர் மழையில்
நனையும் போது
No comments:
Post a Comment