Saturday, 23 August 2014

தேடுகிறேன்

பொழுதுகள் கரைந்தோடினாலும் 
எத்தனை விடியல்கள் 
இரவுகள் தாண்டிச்சென்றாலும்
கானலான நினைவுகளை 
அழிப்பதற்கு இயலவில்லை
இப்போதெல்லாம் என்னிடம் 
பேசுவதற்கு கூட யாருமில்லை
ஏதோ ஒர் மூலையில் 
உன் நினைவுகளும், 
வாழ்க்கை எனும் விருட்ச்சத்தின்
சில உறவுகள் மட்டுமே
 என்னை தொடர்கின்றன,
தொடர்கதைக்குள்ளும் சிறுகதை 
ஆகிப்போன என் வாழ்வும்
என்னில் வாழும் 
உயிருமே எஞ்சியுள்ளது 
பிரியும் வரை உன் உறவின்
 அருமை புரியவில்லை





No comments:

Post a Comment